முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்காவில் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க பில் கேட்ஸ் திட்டம்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - ஆப்பிரிக்க நாடுகளில் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாத பகுதிகளில் டிரோன்கள் மூலமாக தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இதுதொடர்பான சாத்தியக் கூறு ஆய்வு ஒன்றையும் அது அமெரிக்க டிரோன் நிறுவனம் ஒன்றின் துணையுடன் நடத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் தொலை தூர ஆப்பிரிக்க கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி மருந்து உரிய நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆப்பிரி்க்காவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் முன்னேறாமல்தான் உள்ளன.

இப்படிப்பட்ட இடங்களுக்கு மருந்துகளை எடுத்துச் செல்வது சிரமமானதாக உள்ளது. எனவேதான் இதுபோன்ற இடங்களுக்கு ஆளில்லாத விமானங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க திட்டமிடுகிறது பில் கேட்ஸ் பவுண்டேஷன்.  இதற்கான ஆய்வைத்தான் அது மேற்கொண்டுள்ளது. அதன்படி தொலை தூர ஆப்பிரிக்கக் கிராமங்களுக்கு ஆள் இல்லாத விமானம் மூலமாக தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்படும். அந்த விமானமானது ஒவ்வொரு இடமாக மருந்துகளை வைத்து விட்டு வரும். இதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை வராது, போக்குவரத்துப் பிரச்சினை வராது, செலவுகள் குறைவு, பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் அவை போய்ச் சேரும் என்பது முக்கியமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்