முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் வாக்குறுதிகள்: சோனியா காந்தி கிண்டல்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பகல்பூர் - பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் எல்லாம் போலியான வாக்குறுதிகள், அவற்றை பீகார் மக்கள் நம்பக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் வரும் 12-ம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இந்த தேர்தல் மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

அப்பொழுது அவர், நிதஷ் குமார் அரசை பலவகையிலும் தாக்கி பேசினார்.  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தனது, தீவிர பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். பகல்பூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது., பீகார் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். ஆனால் இதை பீகார் மக்கள் நம்ப தயாராக இல்லை. மோடி அரசின் 17 மாத ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. மக்கள் விரோத கொள்கைகளை இந்த அரசு பின்பற்றுகிறது.

ஆயிரக்கனக்கான விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி ஆட்சியில் வர்த்தகர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் அவதி படுகிறார்கள். ஆனால் மோடியோ அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார். எனவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறு நான் அவரை கேட்டுக்கொள்கிறேன். போலியான உணர்ச்சி பேச்சுகளுக்கு ஆளாக வேண்டாம். மக்களை பற்றி சிந்தியுங்கள் என்று சோனியா காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்