முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் ரன்களை கடந்த முதல் டி20 வீரர் : கோஹ்லி புதிய சாதனை

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் டி20 வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் கோஹ்லி படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடந்த டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  எனினும் இந்த போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி அதிவேகமாக ஆயிரம் ரன்களை எடுத்த வீரர்  என்ற சாதனையை படைத்தார்.  சர்வதேச டி20 போட்டிகளில், உலகிலேயே அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்துள்ளது கோஹ்லியுடையது தான்.

2010ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டிகளில் களமிறங்கிய கோஹ்லி,  தெ.ஆப்பிர்காவுக்கு எதிரான தனது 29வது போட்டியில், 27வது இன்னிங்சை ஆடினார். அப்போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய கோஹ்லி, இதுவரை 1015 ரன்களை குவித்துள்ளார்.  மேலும் அதிவிரைவில், ஆயிரம் ரன்களை கடந்த முதல் டி20 கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். கோஹ்லிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து பேஸ்ட்மேன்கள் கெவின் பீட்டர்சன் மற்ரும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தலா 32 இன்னிங்சுகளில் இச்சாதனையை படைத்து முதலிடத்தில் இருந்து வந்தனர். தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

34 இன்னிங்சுகளில் 1000 ரன்களை கடந்த கிறிஸ் கெய்ல் 3வது இடத்திலும், 35 இன்னிங்சுகளில் கடந்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 4வது இடத்திலும், 36 இன்னிங்சுகளில் ஆயிரம் ரன்களை கடந்த சக நாட்டு வீரர் மார்டின் கப்தில் 5வது இடத்திலும் உள்ளனர்.  மேலும், இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் டி20 சர்வதேச போட்டிகளில் அடித்த முதல் சதம் என்ற பெருமை ரோகித் ஷர்மா பெற்றார். மேலும், டி20 போட்டிகளில் 50 முறை இந்தியாவுக்கு தலைமையேற்ற பெருமையை டோணி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்