முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட பாடலாசிரியர் முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில் ரூ 5 லட்சம் பரிசு

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முதுபெரும் திரைப்படப் பாடலாசிரியரும், தமிழறிஞருமான முத்துசாமி படைத்துள்ள பல்வேறு நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாய் வழங்கப்பட்டதோடு, அவரது தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர், தமிழறிஞர், முத்துசாமி தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி எண்ணற்ற முன்னோடி சாதனைகளைப் படைத்துள்ளதையும்; அவரது திரைப்படப் பாடல்கள் காலத்தால் அழியாத புகழுக்கு உரியதாக விளங்கி வருவதையும்; அவரது சிந்தனையிலும், கற்பனை வளத்திலும் உருவான பல்வேறு திரைக் கதைகள் தமிழ்த் திரையுலகில் இன்றும் புகழுடன் திகழ்ந்து வருவதையும், மேலும் அவர் பல்வேறு நூல்கள் மற்றும் கவிதைகள் படைத்துள்ளதையும் போற்றும் வகையில், அவர் இயற்றியுள்ள நூல்களுக்குப் பரிசாக 5,லட்சம் - ரூபாயும், 96 வயதிலும் தொடரும் அவரது மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்குமாறு ஆணையிட்டிருந்தார்..

அதனைத் தொடர்ந்து அதிமுக பொருளாளரும், , நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான . ஓ. பன்னீர்செல்வம்,, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் . ஆர். வைத்திலிங்கம், , தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான . தங்கமணி ஆகியோர், நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள கவிஞர் முத்துசாமி இல்லத்திற்கு நேரில் சென்று, முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக 5,00,000/- ரூபாய்க்கான வரைவோலையையும், அவரது மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாதத்திற்கான 5,000/- ரூபாயையும் ``புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை''யில் இருந்து வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது, நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவரும், நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான .. சுந்தரம், நாமக்கல் நகரக் கழகச் செயலாளரும், நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான . பாஸ்கர் உள்ளிட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.

தமிழறிஞர்களையும், சான்றோர்களையும், சமூக வளர்ச்சிக்குப் பாடுபடும் தன்னலமற்ற தியாக உள்ளம் கொண்டோர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வரும் அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின், நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட . முத்துசாமி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்