முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: மும்பை அணியை வீழ்த்தி புனே வெற்றி

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிதொடரில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. 2-வது லீக் போட்டியில் டெல்லி அணியை கோவா வீழ்த்தியது.இந்நிலையில் இந்தத் தொடரின் 3-வது லீக் போட்டி திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்  எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை சிட்டி எஃப்.சி அணியும் மோதின.

ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி புனே அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 34வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் பியியோக்கியோனி கோல் அடித்து ஆட்டத்தை சமன் படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது பாதியின் 56 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி  மேலும் ஒருகோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். இறுதியில் புனே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்