முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் கூடுதல் செயலாளராக வினய் குவாட்ரா நியமனம்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பிரதமரின் கூடுதல் செயலாளராக பதவி வகித்த ஜாவத் அஷ்ரப் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.  2012ல் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பிரதமரின் கூடுதல் செயலாளராக பதவிக்கு அமர்த்தப்பட்ட ஜாவத் அஷ்ரப், மோடி பிரதமரான பிறகும் அதே பதவியில் தொடர்ந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது அப்பதவியில் இருந்துவிடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அஷ்ரப்பிடமிருந்து பணி தன்மையை வினய் கற்க வேண்டும் என்றும், அதன்பிறகே, அப்பதவியில் அவர் அமர்த்தப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக இருந்த விக்ரம் துரைசாமி, உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட பிறகு அப்பதவிக்கு நியமனம் ஆனவர் வினய். தற்போது துரைசாமி, தென்கொரிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்