முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் படேல் கடத்தப்படவில்லை உயர் நீதிமன்றத்தில் குஜராத் அரசு தகவல்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: கல்வி ,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, கோரி குஜராத் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வரும்ஹர்திக் படேல் ஒரு போதும் கடத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தெரிவித்தது. குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்கள் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு ஹர்திக் படேல் என்ற இளைஞர் முன்னிலை வகிக்கிறார்.,

கடந்த மாதம் அந்த இளைஞர் மர்மமான முறையில் மாயமானார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த மாநிலத்தில் செய்தி பரவியது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று ஹர்திக் படேல்  தென் பூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டம் முடிந்த பின்னர் அவர் திடீரென்று மாயமானார். அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் அவரை திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக்கின் நெருங்கிய இரு நபர்கள் ஆட் கொணர்வு மனு தாக்கல்செய்தார்கள்.

இந்த நிலையில் குஜராத் மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு ஹர்திக் படேல் கடத்தப்படவில்லை என எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.இதனைத்தொடர்ந்து ஹர்திக் படேல் கடத்தப்பட்டார் என கூறும்ஹர்திக் படேலின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் அடோபர் 19ம் தேதியன்றுதகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, மற்றும் கே.ஜே. தாகர் அறிவுறுத்தினர்,

சாதாரண உடையில் இருந்த போலீசார் ஹர்திக் படேலை கடத்திச் சென்றதாக கூறப்படுவது உண்மையல்ல. ஹர்திக் படேல் ஒருபோதும் கடத்தப்படவில்லை. என்று அம்பலியரா போலீஸ காவல் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஒய்.ஜே. ரத்தோட் கூறினார். அவர் அரசின் சார்பில் பிரமாண பத்திரத்தினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்