முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 ஏ பதவிகளில் 1863 காலியிடங்கள் டிசம்பர் 27ம்தேதி எழுத்துத்தேர்வு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 1863 பணியிடங்களுக்கு வரகும் டிசம்பர் மாதம் 27 ம்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2ஏ நேர்முகத்தேர்வு அல்லாத ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் ) தேர்வுக்கான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (403) மருத்துவம்மற்றும் கிராம சுகாதார பணிகள்( 213) பதிவுத்துறை (59) வணிகவரித்துறை( 191) தலைமைச்செயலக நிதித்துறை( 26) தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்( 62) மீன்வளத்துறை (45) போக்குவரத்துத்துறை (35) பள்ளிக்கல்வி இயக்ககம்( 76) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை( 136) மற்றும் இதர பலதுறைகளில் உள்ள உதவியாளர் பதவி மற்றும் கூட்டுறவுத்தணிக்கை துறையில் இளநிலை கூட்டுறவுத்தணிக்கையாளர் (306) பதவி ஆகியவற்றில் உள்ள 1863 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிக்கையை அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. வரும் டிசம்பர் மாதம் 27ம்தேதி இதற்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு நவம்பர் 11 ம்தேதி கடைசி நாளாகவும் வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த நவம்பர் 13 ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு கட்டணமாக 75 ரூபாயும் விண்ணப்பக்கட்டணமாக ரூ 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.,

116 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வலைதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன தேர்வாணையத்தின் இணையதளமானwww.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்