முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர்களுக்கு மேலும் ஒரு மருத்துவக்காப்பீடு அமைச்சர் கோகுலஇந்திரா

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நெசவாளர்களுக்கு மற்றொரு மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் புதிய ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.  முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் மருத்துவ காப்பீடு பெறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவும், ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டம் 01.10.2014 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஒரு நெசவாளரின் குடும்பத்தில் 5 பேர் வரை தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.37,500/- அளவிற்கு மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் அக்டோபர் 1ம்தேதி முதல் இரண்டாம் ஆண்டுக்கு 1,50,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுடன் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான திட்ட புதுப்பிப்பு சான்றிதழை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா முன்னிலையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இவ்விழாவின்போது, கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் உருவாக்கப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென்பட்டு சேலைகள் மற்றும் காட்டன் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. காட்டன் சேலைகளுக்கு ஜெயாம்பிகா காட்டன் சேலைகள் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா,பெயரிட்டார் . இந்நிகழ்ச்சியின்போது கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர். தி.ந.வெங்கடேஷ், கூடுதல் இயக்குநர் க.கர்ணன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்