முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை திடீர் சரிவு: பவுனுக்கு ரூ.192 குறைந்தது.

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.192  குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.19,920 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்றுமுன்தினம் பவுன் ரூ.20,208 ஆனது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. பவுனுக்கு ரூ.192 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20,016 ஆக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,502க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் விலை நிலவரம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.680 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 740 ஆகவும், ஒரு கிராம், ரூ.39.30 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்