முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகார் மெகா கூட்டணியின் 4-வது கூட்டாளி மந்திரவாதி: பிரதமர் மோடி கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிரிராஜ் சிங் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ காட்சியை வெளி யிட்டுள்ளார். அதில், மந்திரவாதி ஒருவருடன் நிதிஷ் குமார் அமர்ந்துள்ளார். இவர்களுடன் நிதிஷ் கட்சியின் மோகமா தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் உள்ளார். அப்போது நிதீஷுக்கு ஆதரவாக மந்திரவாதி ஸ்லோகங்களை சொல்கிறார். இருவருக்கிடையிலான உரை யாடல் தெளிவாக கேட்கவில்லை.

எனினும், ‘கவலைப்பட வேண்டாம்’ என்று நிதிஷ் குமாரிடம் மந்திரவாதி கூறுவது தெளிவாக கேட்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் பரம எதிரியாக இருந்து இப்போது அவருடன் கைகோர்த்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகவும் மந்திரவாதி சில ஸ்லோகங்களைக் கூறுகிறார். இந்த வீடியோவைக் குறிப்பிட்டு பிகார் மாநிலம் மர்ஹவ்ராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:

கிராண்ட் அலையன்ஸில் 3 கட்சிகள் இருப்பதாகவே நான் அறிவேன். அதாவது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ். இப்போதுதான் கேள்விப்பட்டேன் 4-வதாக ஒருவர் சேர்ந்துள்ளார் என்பதை, ஒரு மந்திரவாதி இணைந்துள்ளார். ஜனநாயகம் என்பது மந்திர தந்திரங்களால் நடைபெறுவதல்ல, மக்களை வைத்துத்தான் ஜனநாயகம் நடைபெறுகிறது. ஜனநாயகத்துக்கு இவ்வாறு ஒருவர் தீங்கு செய்ய முடியுமா? இளைஞர்கள் வளர்ச்சிக்காக ஒரு தாந்திரீகர் என்ன செய்ய முடியும்?

இனி லாலு தனது கட்சியை ராஷ்ட்ரிய ஜாது-தோனா தளம் என்றே பெயரிட வேண்டும். மாஹாகாத்பந்தன் (மகா கூட்டணி) எப்போதும் மகாஸ்வார்த்பந்தன் (மகா சுயநலக் கூட்டணி) ஆகவே உள்ளது.  சமீபத்தில் ஒரு கூட்டத்தில் மைக்கில் பழுது ஏற்பட மைக் மெக்கானிக்கை தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டினீர்கள், உங்களுக்கு அவர் ஒன்றுமில்லாதவர்தான் ஆனால் அவர் எங்கள் சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்