முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கத்தின் அறங்காவலர் ஆகிறார் கமல்: நிர்வாகிகள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் தெரிவித்தார்.தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணி' வெற்றி பெற்றது. நாசர் தலைமையிலான அணியின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்தார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இச்சந்திப்பில் நடிகர் சங்கத்தின் அறங்காவலரில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக விஷால் தெரிவித்தார். மேலும், இனிமேல் 'பாண்டவர் அணி' என்று தங்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும், நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று கேட்டுக் கொண்டார்கள்.இச்சந்திப்பில் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசியது,

"சரத்குமார் சார் SPIC சினிமாஸ் மூலம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். அது இன்னும் எங்கள் நிர்வாகத்துக்கு வந்து சேரவில்லை. இன்னும் 2 நாட்களில் அது தொடர்பான விஷயங்கள் எங்களை வந்து சேரும். அதைப் படித்து, ஆராய்ந்து நிர்வாகம் முடிவு எடுக்கும்.எங்களது 41 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை. ரஜினி சார் மட்டுமன்றி பல நண்பர்கள் 'தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்' என பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் சங்கம் ஆரம்பிப்பதில் எந்த ஒரு பிரச்சினை இல்லை.

ஆனால், பெயர் மாற்றத்துக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கிறது. சட்டரீதியாக அது முடியும் எனில் அந்த தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.மேலும், நடிகர் சூர்யா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்ச ரூபாய் அளித்திருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் அமைவது எப்படி?: விஷால் விளக்கம் நிருபர்கள் கேட்ட போது விஷால் அளித்த பதில் வருமாறு: நடிகர் சங்க கட்டிடம் முதலில் நடிகர்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். இதில் நாடக அரங்கம் மற்றும் திரைப்படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு வசதியான இடமாக இது அமையும். 19 கிரவுண்டு நிலம் இருக்கிறது.

எனவே தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படும். இந்த கட்டிடத்தை எப்படி கட்டுவது என்று முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆலோசனைப்படி முடிவு செய்து அதன்படி கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்த மாட்டோம். இளம் நடிகர்கள் சேர்ந்து தனியாக சினிமா எடுத்து நிதி திரட்டுவோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டுவோம். அரசியல் தொடர்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம்’ என்றார்.  ரஜினிக்கு கவுரவ பதவி  நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் விஷால் கூறும்போது, ‘கமலஹாசன் அறங்காவலராக பதவி ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். ரஜினிக்கு இதுபோல் கவுரவ பதவி வழங்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஷால், ‘‘நிச்சயம் அவருக்கும் கவுரவ பதவி வழங்குவோம். மூத்த நடிகர்களின் ஆலோசனை எங்களுக்கு தேவை’ என்றார்.

நடிகர் சங்க கவுரவ பதவியை ஏற்க கமல் சம்மதம்  நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒரு கருத்து எழுந்தது. அதன்படி ரஜினி, கமல் ஆகியோருக்கு கவுரவப் பதவி வழங்குப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு நடிகர் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் மேடையில் அறிவித்தார். செயற்குழு டிரஸ்டிகளில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், நடிகர் சங்கத்தில் கவுரவ பதவிக்கு ரஜினி எதுவும் சம்மதம் தெரிவிக்காமலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்