முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறைக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கொலிஜியம் முறை உள்ளது. இந்த கொலிஜியம் முறை தொடர்ந்து நடைபெறும் .  அரசியல் சாசன அமர்வாயம் சீரமைப்பு மேற் கொள்ளும் வரை இந்த கொலிஜியம் முறை செயல்பாட்டில் இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி கேகர் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை கொலிஜியம் அமைப்பு நியமனம் செய்து வருகிறது. இந்த கொலிஜியம் அமைப்பில்  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்  உள்ளிட்ட நீதிபதிகள் உள்ளனர் .இந்த கொலிஜியம் முறையை நீக்கி விட்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அமைப்பில் நீதிபதிகளுடன் அரசியல் தலைவர்களும் இடம் பெற்றிருப்பார்கள் என்றுஅரசு தெரிவித்து இருந்தது.இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து பழை ய கொலிஜியம் முறையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று  அறிவித்தது.

இந்த நிலையில் நீதிபதிகளை நியமனம் செய்வதில் கொலிஜியம் அமைப்புக்கு இருந்த தடையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. தேசிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை கடை பிடிப்பது தொடர்பாக இந்த கொலிஜியம் அமைப்பில் சீரமைப்பு செய்ய அரசியல் சாசன அமர்வாயம் முடிவு செய்யும் வரை கொலிஜியம் செயல்பாட்டில் இருக்கும் என்று நீதிபதி கேகர் தெரிவித்தார்.அவரது தலைமையிலான 5நீதிபதிகளைக் கொண்ட அமர்வாயம்  கொலிஜியம் முறையே நீடிக்கும் என அறிவித்து இருந்தது. அந்த அமர்வாயத்தின் தீர்ப்பை விளக்கும் வகையில் நீதிபதி கேகர் தற்போது கொலிஜியம் முறையை தொடர்ந்து நீடிக்கும் என விவரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்