முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் விக்ரமன் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு, பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடுதிரைப்படஇயக்குநர்கள்சங்கத்தைச் சேர்ந்த 64பேர்களின் தன்னார்வ உடல் தானத்திற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் உதவிஇயக்குநர்கள் 62பேர்கள், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர்கள், எனமொத்தம் 64 பேர்கள் இறந்தபின் எரிக்கப்படும் அல்லதுபுதைக்கப்படும் எந்தபயனும் இல்லாமல்போகும் உடலைமருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், உடல்தானத்தில் நமது தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழவேண்டுமென்ற பேராவலுடனும், மரணத்திற்கு பின் அரசு பொதுமருத்துவமனைக்கு அவர்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்து, அதற்கான உறுதிப் பத்திரங்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்து, வாழ்த்துபெறவேண்டும் என்ற மனுவினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் வழங்கினார்.

அதன்படி, முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு, பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64பேர்களின் தன்னார்வ உடல்தானத்திற்கான உறுதிப் பத்திரங்களைவழங்கி, வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்