முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதச்சார்பின்மை - சகிப்பின்மை பற்றி விவாதம்: பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மதச்சார்பின்மை - சகிப்பின்மை பற்றிய விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பல்வேறு இன்னல்களையும், அவமானங்களைச் சந்தித்தபோதும், அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேற ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறினார். அரசியல் சாசன சிறப்பு அமர்வில் ராஜ்நாத் சிங் பேசும்போது,

பி.ஆர்.அம்பேத்கர் பல்வேறு அவமானங்களையும், தடைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய தேசத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடுநிலையான பார்வையை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தன்னை பிறர் புறக்கணிப்பதாகவும், இழிவுபடுத்தியதாகவும் உணரவில்லை. இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப்பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என உறுதிபட தெரிவித்தார் என்று கூறினார்.

அண்மையில், டெல்லியில் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது என்றார். ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாக கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்களவையில் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துகள் அமீர்கானை மறைமுகமகா விமர்சிக்கும் விதமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்