முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நொடி விமர்சனம்

வியாழக்கிழமை, 2 மே 2024      சினிமா
One-second-review 2024-05-0

Source: provided

ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்

ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடும், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு, பரபரப்பான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதோடு, என்ன நடந்திருக்கும்? என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பி.மணிவர்மன், க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானர் கதையை பல திருப்பங்களோடு சொல்லியிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.

தனது கணவர் எம்.எஸ்.பாஸ்கார் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் ஸ்ரீ ரஞ்சனி, கந்து வட்டி தொழில் செய்யும் வேல ராமமூர்த்தி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். வழக்கை விசாரிக்க தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் தமன் குமார், நேரடியாக வேல ராமமூர்த்தியை ரவுண்டப் செய்ய, அங்கு தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரை தொடர்கிறது.

காணாமல் போன எம்.எஸ்.பாஸ்கரை தமன் குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, திடீரென்று நிகழும் இளம் பெண் நிகிதாவின் கொலை, அந்த வழக்கையும் கையில் எடுக்கும் தமன் குமாரின் அதிரடி நடவடிக்கைகள் என இரண்டு மணி நேரத்திற்கு ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுவது தான் ‘ஒரு நொடி’

ஒரு குற்ற வழக்கில் பயணிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பல திருப்பங்களோடு சொல்வதோடு, இது தான் நடந்திருக்கும், இவர் தான் செய்திருப்பார், என்று ரசிகர்களை யூகிக்க வைத்தாலும், இறுதியில் அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்து, யூகிக்க முடியாத ஒரு விசயத்தை சொல்லி படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், ‘ஒரு நொடி’ மறக்க முடியாத ஒரு நொடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து