முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் ,வங்க தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவிற்கு ஜாமீன்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

டாக்கா -  வங்க தேசத்தில் முக்கிய எதிர் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் நேற்று ஜாமீன் அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள ஒருகோர்ட்டில் சரண் அடைந்ததைத்தொடர்ந்து இந்த ஜாமீன் அளிக்கப்பட்டது. வங்க தேசத்தில் கடந்த 2007ம்ஆண்டு க்கு முந்தய கால கட்டத்தில் 200 கோடி அமெரிக்க டாலர்களை ஊழல் செய்தாக கலிதா ஜியா மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தப்புவதற்காக அனைத்து சட்ட வாய்ப்புகளையும் கலிதா  மேற் கொண்டுள்ளார்.  நீதிபதி முகமது அமினுல் இஸ்லாம் முன்னாள் பிரதமர் கலிதாவிற்கு ஜாமீன் அளிப்பதாக தெரிவித்ததுடன் வருகிற 28ம் தேதியன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இவ் வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கிறது. வங்க தேச சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி 70வயது கலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. கடந்த 2001ம்ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை வங்க தேச பிரதமராக கலிதா ஜியா இருந்தார். அப்போது கனடாவை ச் சேர்ந்த  நிகோ ரிசோர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் எரி வாயு களத்தை எரிவாயு எடுக்க ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது .

அந்த ஒப்பந்தத்தை அளித்தற்காக கலிதா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.கனடா நிறுவனத்திற்கு எரி வாயு எடுக்கும் ஒப்பந்தம் அளித்த விவகாரத்தில் அரசுக்கு 178கோடிஅமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் வழக்கில் கலிதா கோர்ட்டில் ஆஜராக வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது கலிதாவிற்கு அவரது வங்க தேச கட்சியின்(பி.என்.பி) ஆதரவு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு அரணாக வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு தொடர்ந்தபோது அதனை சுப்ரீம் கோர்ட் ஆதரித்து இருந்தது.

வங்க தேச ஊழல் தடுப்பு ஆணையம் கலிதாவிற்கு எதிராக வழக்கு மேற் கொண்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டும் ஆதரித்தது. இந்த ஊழல் வழக்கில் வங்க தேச கட்சி தலைமையிலான 4கட்சி கூட்டணி அரசில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கலிதா ஜியா மீது மேலும் இரு ஊழல் வழக்குகள் இருக்கின்றன. வங்க தேசத்தில் இரு முறை பிரதமராக இருந்த கலிதா ஜியா கூறுகையில் என் மீது உள் நோக்கத்துடன் ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார். அவர் கடந்த 1991ம்ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரையிலும் அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்