முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு சரிகிறது

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தங்கம் விலை பவுன் ரூ.19 ஆயிரத்தை நோக்கி சரிகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி பவுன் ரூ.19 ஆயிரத்து 232 ஆக இருந்தது. அதை தொடர்ந்து சிறிது ஏற்ற இறக்கத்துடன் கடந்த 27-ம் தேதி புவுன் ரூ.19 ஆயிரத்து 216 ஆக விற்றது. மறுநாள் 28-ம் தேதி பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19 ஆயிரத்து 104 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைதான் நிலவியது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.48 குறைந்தது.

ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 56 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.2,382-க்கு விற்கிறது. தங்கம் விலை பவுன் ரூ.19 ஆயிரத்தை நோக்கி சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்டு 8-ம் தேதி பவுன் ரூ.18 ஆயிரத்து 912 விற்றது. அதையடுத்து தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.

தற்போது இந்த மாதத்தில் தான் விலை குறைந்து ரூ.19 ஆயிரத்துக்கு இறங்கி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருகிறது. எனவே, விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்