முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை 50 காசுகள், டீசல் 46 காசுகள் குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று குறைப்பு செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 49 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசுகள் குறைந்து ரூ.60.28 ஆக இருக்கும். டீசல் விலை 49 காசுகள் குறைந்து ரூ.47.28 ஆக இருக்கும் இந்து விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்