முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

புதன்கிழமை, 23 டிசம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ரஷியா புறப்பட்டு சென்றார். அணுசக்தி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே ஆண்டுதோறும் இரு தரப்பு உறவை வளர்க்கும் விதத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் வருடாந்திர பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக ரஷியா தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று சென்றார்.ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி செல்வது இது இந்த ஆண்டில் 2-வது முறையாகும்.

இன்று, இரு தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி முடித்தவுடன், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக, அணுசக்தி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முன்னதாக, பிரதமரின் ரஷிய பயணம் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், டெல்லியில் நிருபர்களிடம் கூறும்பொழுது., ரஷியாவுடன் பலவேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளிடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆண்டு வர்த்தகத்தை நடப்பு 10 பில்லியன் டாலரில் இருந்து 10 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2 லட்சத்து ஆயிரம் கோடியாக) அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன என கூறினார்.

ரஷ்ய பயணத்தின் போது பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக புதினுடன் பேச்சு நடத்துவார் என்றும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பார்கள் என்றும் தெரிகிறது. இன்று கிரெம்ளின் மாளிகையில், இந்திய, ரஷிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் கலந்துரையாடுகிறார்கள். மாஸ்கோவில் ரஷியாவாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - ரஷ்யா மாநாட்டின்போது பாதுகாப்புத்துறையி்ல 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. ரஷ்யாவிடமிருந்து 2வது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை லீசுக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான முக்கிய ஒப்பந்தமும் இன்று கையெழுத்தாகவுள்ளது. ஏற்கனவே கே 152 (ஐஎன்எஸ் சக்ரா) என்ற நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது. இதேபோல 600 மில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து 200 காமோவ் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது. 2 நாள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, 25–ந் தேதி ஆப்கானிஸ்தானில் ஒரு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்