முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை தொடர்ந்து விலை உயர்வாக உள்ளதால்  5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்புவகைகளின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தாறுமாறாக உயர்ந்தது. விளைச்சல் குறைந்ததால், இந்த நிலை ஏற்பட்டது. மேலும், பருப்பு வியாபாரிகள், பருப்பை பதுக்கி வைத்து, செயற்கையான விலை ஏற்றத்துக்கு வழிவகுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது. இந்த புகார்கள் அடிப்படையில், வருமான வரித்துறை நாடு முழுவதும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் பருப்பு விலை உயர்வு பிரச்சனை மீண்டும் வெடித்தெழும் என்று கருத்து நிலவி வருகிறது.  விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு மூட்டைகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டர் பணிகள் நிறைவடைந்து பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதிக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு துவரம் பருப்புகள் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் துவரம் பருப்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்