முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம்: உரையின் போது கண் கலங்கிய ஒபாமா

புதன்கிழமை, 6 ஜனவரி 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய உரையின் போது கண் கலங்கிய அதிபர் ஒபாமா கண்கலங்கினார். அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த உரையில் அவர்  3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.  இதற்கு மேலும் சாக்கு போக்குகளை சொல்லி சமாளிக்க கூடாது.

ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.  இந்த உரையில் பள்ளி குழந்தைகள் பற்றி பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒபாமா கண் கலங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்