முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்தியா அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

அடிலைட் - இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் அதிரடியாக ஆட்டத்தில்  ஆஸ்திரேலிய அணியை அபாரமாக வெற்றிக் கொண்டது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரிலேயா முதலில் இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. 200 ரன்களை இந்தியா தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த இலக்கை இந்தியாவால் எடுக்க முடியாமல் போனது. விராத் கோலி அபாரமாக ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் 90 ரன்களைக் குவித்தார். கோலி மட்டும் சதம் போட்டிருந்தால், சர்வதேச டி-20 போட்டிகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்திருக்கும். ரோஹித்திடம் தற்போது அந்த சாதனை உள்ளது. முன்னதாக ரோஹித் சர்மா 31கள் ரன் குவித்து அவுட்டாக அதன் பின்னர் விராத் கோலியும், ரெய்னாவும் ரன் குவிப்பைத் தொடர்ந்தனர். ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.ரோஹித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராத் கோலியும், சுரெஷ் ரெய்னாவும் சேர்ந்து பட்டையைக் கிளப்பினர்.

கோலி அபாரமாக ஆடி அட்டகாசமான அரை சதம் போட்டு இந்தியாவின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை. இறுதி வரை ஆட்டமிழக்காமல், 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார் கோலி. மறுபக்கம் சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணி தனக்குக் கிடைத்த 3பந்துகளில் 11 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடக்கம். இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைக் குவித்தது. அதன் பிறகு ஆட வந்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் அதிரடியாகத்தான் ஆடியது. ஆனால் இந்தியாவின் பவுலிங்கும், பீல்டிங்கும் ஆஸ்திரேலியாவின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி விட்டது.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பின்ச் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 44 ரன்களைக் குவித்தார். அவரை அஸ்வின் அழகாக எல்பிடபிள்யூவாக்கினார். மற்றவர்களில் யாருமே பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.  ஸ்டீவ் ஸ்மித் 21, வார்னர் 17, லின் 17, ஷான் வாட்சன் 12, பால்க்னர் 10 என வீ்ழ்ந்தனர். இறுதியில் 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா பயணத்தில் ஒரு நாள் தொடரை இழந்த இந்தியா அதில் கடைசிப் போட்டியில் மட்டும் வென்றது. தற்போது டி-20 தொடரில் முதல் போட்டியிலேயே அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. இந்திய அணியில் யுவராஜ் சிங் மீண்டும் இடம் பிடித்தார். புதுமுக வீரராக களமிறங்கிய ஹர்டிக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பெற்று அவரின் முதலாவது சர்வதேச டி-20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்