முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடம்

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா முழுமையாக வென்றதன் மூலம் ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. முன்னதாக இந்திய அணி 8-வது இடத்தில் இருந்தது. தற்போது, ஆஸ்திரேலியா, 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி. இதனால் ஐ.சி.சி டி-20-க்கான தரவரிசையில்  இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, தர வரிசையில் இந்தியா 8-வது இடத்தில் இருந்தது. ஆனால், 3-0 என்ற கணக்கில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்ததால்  இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக, 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவோ 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி 120 புள்ளிகளுடன், முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 118 புள்ளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது. 3-வது இடத்தில் 118 புள்ளிகளுடன் இலங்கையும் உள்ளது. மேலும், இங்கிலாந்து 117 புள்ளிகளோடும், நியூசிலாந்து 116 புள்ளிகளோடும், தென் ஆப்பிரிக்கா 115 புள்ளிகளோடும், ஒவ்வொரு புள்ளிகள் வித்தியாசத்தில், முறையே, 4-வது முதல் 6-வது வரையிலான இடங்களில் உள்ளன.

பாகிஸ்தான், 113 புள்ளிகளோடு, இப்பட்டியலில் 7வது இடத்திலும், இந்தியாவிடம் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா 110 புள்ளிகளோடு 8-வது இடத்திலும் உள்ளது. 9-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் 80 புள்ளிகளோடு இடம்பெற்றுள்ளது.66 புள்ளிகளோடு பத்தாவது இடத்தில் ஸ்காட்லாந்தும், வங்கதேசம், 64 புள்ளிகள் மட்டுமே எடுத்து 11-வது இடத்திலும், 61 புள்ளிகளோடு நெதர்லாந்து 13-வது இடத்திலும், 54 புள்ளிகளோடு ஜிம்பாப்வே 14-வது இடத்திலும், அயர்லாந்துக்கு 15-வது இடத்திலும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்