முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயார்: சவுதி அரேபியா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

ரியாத் - சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலை தொடுக்க சவுதி அரேபியா  தயாராக உள்ளதாக அந்நாட்டின் பிரிகேடியர் ஜெனரல் அகமது  அல்-அஸிரி தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் வான்படையானது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் வீரர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்து வருகிறது. இருப்பினும், தரைவழி தாக்குதலுக்கு எந்த ஒரு உலகநாடுகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை. சிரியா மற்றும் ஈராக் ராணுவம் மற்றும் தீவிரவாத குழுவிற்கு எதிரான படைகளுமே தரைவழியாக சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயார் என்று சவுதி அரேபியா அறிவித்து உள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா பிரிகேடியர் ஜெனரல் அகமது  அல்-அஸிரி பேசுகையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலை நடத்த கூட்டு நாடுகளுக்கு விருப்பம் இருப்பினும், எங்களுடைய பங்களிப்பும் இருக்கும் என்று கூறிஉள்ளார். கடந்த  2014-ம் ஆண்டே அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா இடம்பெற்று உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி அரேபியா குண்டு வீசிவருகிறது. ஏமனிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டுப்படையானது தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்