முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சியின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவில் டிராவிட்

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இடம்பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக வருவாய் மற்றும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறையை நீக்க, ஷசாங் மனோகர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ராகுல் டிராவிடை ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவில் ஐ.சி.சி சேர்த்துள்ளது. இந்தக் குழுவில் ஐ.சி.சி செயற்குழுவின் தலைவர் இடம் பெறுவார்.

அவர் போக ராகுல் டிராவிட், சட்ட வல்லுநர் லூயிஸ் வெஸ்டன், ஊழல் தடுப்பு ஆலோசகர் ஜான் அப்பாட் ஆகியோரும் இடம் பெறுகின்றனர். இந்தக் குழுவில் எக்ஸ் அபிசியோ உறுப்பினர்களாக ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் சர் ரோனி பிளானகன், ஐ.சி.சி தலைமை செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஆகியோர் இருப்பார்கள் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது. தற்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு வருடத்திற்கு ஒருமுறை கூடி ஊழல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும், திட்டங்கள் வகுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்