முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டு தரவேண்டிய 45 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் தர உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்டில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 45 டி.எம்.சி.தண்ணீர் தரவேண்டும் என்று கடந்த ஆண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், கர்நாடகா தரமறுத்துவிட்டது. எனவே, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 45 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

சாதகமான செயல்பாடு இல்லாத நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தது. அதன்மீது இதுவரை உச்சநீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு நேற்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்