முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு : அம்ரீந்தர் குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான  அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலின் போது நாங்கள் அந்த மாநிலத்தில் வெற்றி பெறுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறிவருகிறார்கள். அவர்களுடன் காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கூட்டு வைத்திருக்கிறார்கள். எனவே நாங்கள் வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியினர் கூறிவருகிறார்கள் என்று அம்ரீந்தர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, உத்தரப்பிரதேச மாநிலம் மிகப்பெரிய மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி வெற்றி பெறுவது என்பது இயலாத விஷயம் . எனவே உத்தரப்பிரதேச மாநில அரசியலில் நாங்கள் நுழைய விரும்பவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாட்டின் எல்லா பகுதிகளிலும் போட்டியிட்டோம் அது பெரிய தவறு ஆகும் . அதேப்போன்று வரவிருக்கும் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்.  பிந்தரன் வாலேவுடன் எங்களது போட்டாக்களை இணைத்து அம்ரீந்தர் சிங் இணைத்து போஸ்டர்களாக வெளியிட்டு இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தான்  பிரிவினை வாதிகளை தங்கள் கட்சி இணைத்து பயங்கரத்தை உருவாக்குகிறது என்று அம்ரீந்தார் குற்றம் சாட்டுகிறார். பஞ்சாப்பில் எங்களுக்கு பிரதான போராட்டம் காங்கிரஸ் கட்சியுடன் தான். அகாலிதளம் கட்சி அங்கு பலவீனம் அடைந்து விட்டது. நாங்கள் பஞ்சாப்பில் வெற்றி பெறுவோம். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ் வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அல்லது பாஜ கட்சிக்கு அங்குள்ள மக்கள் வாக்களித்து வருகிறார்கள். ஒரு கட்சியின் மீது உள்ள கோபத்தால்மற் றொரு கட்சிக்கும் மற்றொரு கட்சியின் மீது கோபம் வரும் போது இன்னொரு கட்சிக்கும் பஞ்சாப் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். காங்கிரஸ் அகாலிதளம் ஆகிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக் கை இழந்து வருகிறார்கள். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் பஞ்சாப் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களிப்பார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் டெல்லியில் பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தானுடன் இணைந்து வருகிறது.  பஞ்சாப்பில் சீர் குலைவு ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சி முயல்கிறது. என்று அம் ரீந்தர் சிங் குற்றம் சாட்டி இருந்தார். பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் உங்கள் கட்சியின் முதல்வராக யாரை அறிவிப்பீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கெஜ்ரிவால் உரிய நேரத்திற்கு காத்திருங்கள் என்று அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநில அரசியலில் ஈடுபடுவது குறித்து கேட்டபோது நாங்கள் படிப்படியாக திட்டமிட்டு முன்னேற விரும்புகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்