முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் போரை ஒருவாரத்தில் நிறுத்த உலக நாடுகள் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மூனிச்(ஜெர்மனி) -  சிரியாவில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு உலகின் 17நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இது தொடர்பாக ஜெர்மனியில் நடந்த பேச்சு வார்த்தையில் வெற்றி ஏற்பட்டுள்ளது.இந்த பேச்சு வார்த்தையின் போது ஐ.எஸ் தீவிரவாத குழு மற்றும் அல்கொய்தா உள்ளூர்  பிரிவு அழைக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் மேற் கொண்ட முடிவு உரிய பலனை தருமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

சிரியாவில் நடந்து வரும் போரை ஒரு வார காலத்தில் முடிவுக்கு கொண்டு வர உலகின் 17நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவுடன் இணைந்து நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் இவ்வாறு கெர்ரி தெரிவித்தார். சர்வதேச சிரியா ஆதரவு குழுவும்உறுதி மிக்க உதவியை இந்த வாரம் துவக்குவதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஐநாவின் இலக்கு அமைப்புடன்  நேற்று ஜெனீவாவில் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து  சிரியா ஆதரவு குழு இவ்வாறு தெரிவித்தது- சிரியா போர் நிறுத்த பேச்சு வார்த்தை எதிர்பார்த்ததற்கு மேலாக பலனை தந்துள்ளது இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் எந்தவித மாயையும் இல்லை. என கெர்ரி கூறினார்.உலக நாடுகளின் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருமா என்று நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில்  ஐ.எஸ் தீவிரவாத குழுவும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுர்சா தீவிரவாத குழுவும்இடம் பெறவில்லை இதனால் இந்த ஒப்பந்த பலன்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் ஐயம் உள்ளது என்று ஐரோப்பிய கவுன்சிலின் வெளியுறவு விவகார த்துறை ஜூலியன் பார்னஸ் -டேசி கேள்வி எழுப்பினார். உலக நாடுகள் ஒப்பந்தத்தில் பல மிதவாத  போராட்டக்காரர்கள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். சிரியாவின் அலெப்போ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக உள்ள அல் நுர்சா தீவிரவாத அமைப்பை போர்நிறுத்த பேச்சுக்கு அழைக்காதது தோல்வி நிலையே ஆகும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்