முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேம்ஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: லண்டனுக்கு வெள்ள அபாயம்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

லண்டன் - தேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. தற்போது அங்கு குளிர்காலம். இருந்தாலும் தேம்ஸ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது. கிரீன்விச், தென்கிழக்கு லண்டன் தென்மேற்கு லண்டன் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ள அளவு அதிகரித்துள்ளது. எனவே, லண்டன் நகருக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாயம் உள்ளது.

எனவே அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டனின் மையப்பகுதியான நியூகாடல் உள்ள கஸ்டம் ஹவுஸ், லைம் ஹவுஸ், தி ராயல் நேவல் கல்லூரி பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் வரலாற்றில் குளிர் காலத்தில் தற்போதுதான் முதன் முறையாக தேம்ஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாயம் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்