முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னம்: ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை : த.மா.கா. முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் இறங்குகிறது. தனியாக போட்டியில்லை. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார்.இந்த தேர்தலில் த.மா.கா.வை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்காக பல்வேறு கட்சிகள் முயற்சித்து வருகின்றன.அ.தி.மு.க. அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் ஜி.கே.வாசன் எந்த கூட்டணியில் சேருவார் என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.இந்த நிலையில் கட்சியின் புதிய சின்னம் அறிமுக விழா நேற்று தேனாம்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.கட்சியின் புதிய சின்னமான 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று முன் தீனம் உத்தரவிட்டது.சட்டமன்ற தேர்தலில் இது வெற்றி சின்னமாக அமையும். கடந்த 2002–ல் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தபோது த.மா.கா.வின் சைக்கிள் சின்னமும் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.தற்போது அந்த சைக்கிள் சின்னம் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஒற்றை தென்னை மரமும் வேறு மாநிலத்தில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தென்னந்தோப்பு விவசாயம் சார்ந்தது. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எளிதாக புரிந்து கொள்ள கூடியது. எல்லா மரம், செடி கொடிகளை விட தென்னை மரத்தைதான் தென்னம்பிள்ளை மக்கள் பிரியமாக அழைப்பார்கள்அதை போல நாங்களும் தமிழக மக்களின் பிரியமான பிள்ளைகளாக செயல்படுவோம். எங்கள் கட்சியின் மூவர்ண கொடியில் இந்த சின்னம் இடம் பெறாது. அதில் காமராஜர், மூப்பனார் படங்களே தொடரும். வருகிற 2–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் எங்களது சின்னத்தை பிரபலப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

கள்ளக்குறிச்சியில் தேசிய தலைவர் சிலை அவமதிக்கப்பட்டது ஏற்புடையதல்ல.மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தேசிய விருதுகள் பெற்ற கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு எங்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவரிடம், ‘‘எந்த கட்சியுடன் கூட்டணி. எப்போது கூட்டணி அறிவிக்கப்படும்’’ என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எந்த கூட்டணியும் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தேர்தல் கள நிலவரங்களுக்கு ஏற்ப நாங்கள் முடிவு எடுப்போம். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.த.மா.கா.வை பொறுத்தவரை பிராந்திய கட்சி. தேசிய கட்சியான காங்கிரசில் இருந்து வெகுதூரம் விலக வந்து விட்டோம்.மத்திய மந்திரி பியூஸ் கோயல் முதல்–அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்று கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். தேர்தல் காலங்களில் இதுபோன்று கட்சிகள் ஒன்றை ஒன்று புகார் தெரிவிப்பது வழக்கம்தான். அதுபற்றி அந்தந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்கள்தான் உண்மை நிலை பற்றி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன், கோவை தங்கம், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், ஞானசேகரன், விடியல் சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்