முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயரிங் படிப்பில் சேர 1¼ லட்சம் பேர் விண்ணப்பம்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவு வெளிவருவதற்கு முன்பாக மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 15–ந் தேதி முதல் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையங்கள் மூலமோ மிகவும் எளிதான முறையில் பதிவு செய்து வைத்து பிளஸ்–2 தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.தேர்வு முடிவுகள் வெளிவந்து 10 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதும் மாணவ–மாணவிகள், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று முன் தீனம் வரை (11 நாட்கள்) ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதன் எண்ணிக்கை 1¼ லட்சத்தைதாண்டியது . இதுவரையில் 61,960 பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி விட்டனர்.பிளஸ்–2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்