முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகள் அணி கேப்டன் டேரன் சமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை!

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் - மே.இ.தீவுகள் அணி கேப்டன்  டேரன் சமிக்கு பாகிஸ்தான் கைபர் பதுன்க்வா மாகாண கவுரவ குடியுரிமை வழங்கப்படவுள்ளது. மே.இ.தீவுகள் அணி டி-20 ஓவர் உலககோப்பையை  வென்று கொடுத்த டேரன் சமி, பாகிஸ்தான் உள்ளூர் அணியான பெஷாவர் ஜால்மி அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வீரராக உள்ள சமிக்கு கவுரவக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கைபர் பதுன்க்வா மாகாண முதல்வர் பெர்வெய்ஸ் கட்டாக், டேரன் சமிக்கு கவுரவ குடியுரிமை வழங்குவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்