முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

மால்டா, மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலியாகினர்.

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 6 கட்டமாக நடைபெறுகிறது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 5-ந்தேதி 56 தொகுதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மால்டா மாவட்டம் ஜான்பூர் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பயங்கத சப்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மால்டா மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் ரகசியமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. கியா சூஷெக் என்பவர்தான் இங்கு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளார். அவர் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
மால்டாவில் ஏற்கனவே ஏப்ரல் 17-ந்தேதி தேர்தல் முடிந்து விட்டது. என்றாலும் மற்ற இடங்களில் இறுதிகட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பும் பலப்படுத்தபட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்