முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்கும் முடிவில் அமெரிக்கா திடீர் மாற்றம்

திங்கட்கிழமை, 2 மே 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - பாகிஸ்தானுக்கு ரூ. 4,650 கோடி மதிப்புள்ள 8 எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு பெரும்பாலான அமெரிக்க எம்.பி.க்கள். எதிர்ப்பு தெரிவித்தனர்.  தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்குப் பதிலாக எஃப்-16 ரக போர் விமானங் களை இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தான் பயன்படுத்தும் என அமெரிக்க எம்.பி.க்கள் பலர் கவலை தெரிவித்தனர்.

இந்த போர் விமானங்களின் மதிப்பு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,650 கோடி). இத்தொகையில் 43 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2853 கோடி) அமெரிக்க அரசு மானியமாக வழங்கும். பாகிஸ்தான் 27 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 1794 கோடி) செலுத்தினால் போதும்.  ஆனால் இம்முடிவுக்கு செனட் சபை முட்டுக்கட்டை போட்டது.

இதையடுத்து, பாகிஸ் தானுக்கு ஆயுதம் வழங்கு வதற்காக அமெரிக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்பட மாட்டாது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.  எனவே, எஃப்-16 ரக போர் விமானங்களை விமானங்களை வாங்க வேண்டுமெனில் முழுத் தொகையான ரூ. 4,650 கோடியை பாகிஸ்தான் வழங்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்