முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் கார்களுக்கு தடை எதிரொலி: டெல்லியில் ஓட்டுநர்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக, பதிவு எண் அடிப்படையில் கார்களை இயக்கும் திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் டெல்லி அரசு மேற் கொண்டுள்ளது. இதனிடையே, வர்த்தக ரீதியிலான டீசல் கார்கள், இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் மட்டுமே இயங்க வேண்டும் எனக்கூறி மே 1-ம் தேதி வரை மாநில அரசு கெடு விதித்தது. இதை எதிர்த்த மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவால் சுமார் 30 ஆயிரம் டீசலில் இயங்கும் வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சில டீசல் கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுப்ரீம்கோர்ட் உத்தரவை எதிர்த்து டெல்லி, குர்காவ்ன் போன்ற பகுதி களில் முக்கிய சாலைகளை மறித்து வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

தனியார் உரிமையாளர்கள் டீசல் கார் வைத்துள்ளனர். அவர்களுக்கு தடை விதிக்காமல், வாடகை கார் ஓட்டுநர்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? இந்த தடை மூலம் புதிய காரை வாங்கும் படி எங்களை நிர்பந்திக்கின்றனர். நீண்ட கால பிரச்சினைக்கு திடீர் தீர்வு காண முடியாது என வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத் தினர் தெரிவித்துள்ளனர். நான் வீட்டை விற்று கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டுகிறேன். இந்த தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்