முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்டிலேயே எனது கவனம் உள்ளது: ஷாகித் அப்ரிடி

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      விளையாட்டு
Image Unavailable

லாஹூர் - டி-20 கிரிக்கெட் போட்டியிலேயே எனது கவனம் உள்ளது.  என்றும், இந்த கோடை பருவத்தில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்த தான் முடிவு செய்துள்ளதாக பாக். கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

டி-20 அணியின் முன்னாள் கேப்டனான அப்ரிடி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தற்பொழுது வரை உண்மையான அதிக திறமை நம்மிடம் இல்லை.  இளம் வீரர் ஒருவரையும் என்னால் உறுதியிட்டு அடையாளம் காட்டிட முடியாது. வாரியம் ஆனது பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  அதனுடன் அடிமட்ட அளவிலான பணியிலும் ஈடுபட வேண்டும் என நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத  அப்ரிடி, அதில் பங்கேற்க முடியாது என வாரியத்திடம் முன்பே அறிவித்து விட்டேன் என கூறியுள்ளார்.  டி-20 கிரிக்கெட்டிலேயே எனது கவனம் உள்ளது.  இந்த கோடை பருவத்தில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்துவது என்ற முடிவை வாரியத்திடம் தெரிவித்து விட்டேன். ஆனால் பாகிஸ்தான் அணியை உருவாக்குவதற்காக என்னை சிறந்த முறையில் தயார்படுத்தும் பணியிலும் முழுமூச்சில் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழுவும், அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. வருங்காலத்தில் டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் பரிசீலிக்கப்படலாம் என தெளிவுப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்