முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை

புதன்கிழமை, 4 மே 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது. பிறந்த அந்த குழந்தைக்கு கை, கால்களில் இருக்கும் 20 விரல்களுக்கு பதிலாக மொத்தம் 31 விரல்கள் இருந்தன. 2 கைகளில் 15 விரல்களும், கால் பாதங்களில் 16 விரல்களும் உருவாகி இருந்தன.

இவற்றில் ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும் உள்ளன. கால்களில் தலா 8 விரல்கள் இருக்கின்றன. ஆனால் கை, கால்களில் பெருவிரல்கள் இல்லை. இக்குழந்தையை ‘ஹாங்காங்’ எண அழைக்கின்றனர். இது போன்று அதிக விரல்களுடன் 1000-த்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அக்குழந்தையின் தாய்க்கும் இது போன்று கை,கால்களில் அதிக அளவில் விரல்கள் உள்ளது. எனவே மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருப்பதாக நிபணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  கை, கால்களில் அதிக விரல்கள் இருப்பதால் குழந்தை ஹாங்காங் அதிக சிரமப் படுகின்றான். எனவே சிகிச்சை மூலம் அதை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். குழந்தை ஹாங்காங்கின் தந்தை ஷோயு ஷெஸ்வின் ஏழை. எனவே தனது மகன் சிகிச்சைக்கு உதவும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்