முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறக்கும் படை சோதனை :அட்சய திருதியை முன்னிட்டு நகை விற்பனை பாதிக்கும்

வியாழக்கிழமை, 5 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நகை வாங்கினால் வீட்டில் நகை நிறைய சேரும். செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கை. இதனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். நகை விற்பனையை அதிகரிக்க செய் கூலி இல்லை சேதாரம் கிடையாது என்று பல நகைக் கடைகளில் அறிவிப்பு வெளியிட்டு விற்பனை யுக்தியை கையாள்வார்கள். சில கடைகளில் தங்கம் வாங்குவோருக்கு வெள்ளி இலவசம் என்றும், முன்பதிவு செய்தால் அந்த தேதி விலைக்கே அட்சய திருதியை நாளில் நகை வாங்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் அட்சய திருதியை நாளில் நகைக்கடை திறப்புக்கு முன்பு பெண்கள் கூட்டம் அலை மோதும்.

ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை நாளான வரும் 9-ந்தேதி கூட்டம் இருக்காது என்று நகைக் கடைக்காரர்கள் வருத்தத்துடன் உள்ளனர். காரணம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் கமிஷன் ஆங்காங்கே வாகன சோதனை நடத்துவதுதான். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் பணம் கொண்டு சென்றாலும் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் கொடுத்து விடுவார்கள். இந்த பணத்தை திரும்ப பெற படாதபாடுபட வேண்டும் என்பதால் பொதுமக்கள் எதற்கு வம்பு என்று அதிக ரூபாய்க்கு நகை வாங்க முன்வர மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்