முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலத்தவர் வெளி மாநில மாட்டிறைச்சியை வைத்திருப்பது குற்றமல்ல: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - மகாராஷ்டிரா மாநிலத்தவர் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சியை வைத்திருப்பது குற்றமாகாது என மும்பை ஐகோர்ட்டு  தீர்ப்பளித்துள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தில் மாடுகளை இறைச்சிக்காக வதை செய்வது, புசிப்பது, மாட்டிறைச்சி விற்பனை ஆகியனவற்றுக்கு தடை உள்ளது. மாட்டிறைச்சி விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதம், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அபய் ஓகா, எஸ்.சி.குப்தே மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டத்திருத்தம் 1976-ன் படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மாடுகளை வதைப்பதற்கான தடையை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. அதேவேளையில் வெளிமாநிலங்களில் கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியை வைத்திருப்பது, உண்பது கிரிமனல் குற்றமாகாது.

ஆனால், அவ்வாறு வைத்திருக்கும் மாட்டிறைச்சி வெளி மாநிலத்திலிருந்துதான் கொண்டுவரப்பட்டது என்பதை உறுதி செய்யும் சட்டபூர்வ ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம். பல்வேறு கலாச்சாரத்தின் பின்னணியில் இருந்து வந்த மக்கள் பலரும் வசிக்கும் மும்பை போன்ற பெருநகரத்தில் இத்தகைய தடை உத்தரவு நடைமுறை சாத்தியமற்றது. தனிநபர் உரிமையை மீறுவதால் அந்த சட்டப்பிரிவு ( மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டத்திருத்தம் 1976-ன்- 5டி) ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்