முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள்-இடைத்தரகர் உறவை முறித்து விட்டோம்: மனோகர் பாரிக்கர்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள்,ஏஜென்டுகள் இடையே உள்ள உறவை முறித்து விட்டோம் .ராணுவத்திற்கு தேவையான கருவிகள் வாங்குவது வெளிப்படையாக ஊழலற்றதாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.  பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,  பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் ஆயுதங்களை விற்பதில் உள்ள இடைத்தரகர்களுக்கும் இடையே உள்ள உறவை பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு முறியடித்து விட்டது. இது பெரும் சாதனையாகும். பாதுகாப்புத்துறையில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கும், ஒரு தயக்கம் மற்றும் பயம் காணப்பட்டது. அத்தகைய நிலையை மாற்றுவது என்பது சவாலாகவே இருக்கிறது. 

வெளிப்படைத்தன்மை, அதி வேகமாக முடிவெடுத்தல், மற்றும் பணிகளை மேற்கொள்வதில் சுமூமான நிலை, ஆகியவை எனது அமைச்சகத்தில் ஏற்பட்டவெற்றிகளாகவே உள்ளன.எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள்இடையே தயக்கம் காணப்பட்டது ., அந்த நிலையை தற்போது தவிர்த்துவிட்டோம்.  கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றேன். ரபேல் ஒப்பந்தம் அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல் ,  கையக விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளோம்.பாதுகாப்புத்துறை விவகாரங்களில் யாரும் என் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. அரசின் நலனுக்கான முடிவுகளையே நான் எடுத்து வருகிறேன். எனது முடிவில் ஒன்றிரண்டு தவறுகள் ஏற்பட்டு இருக்கலாம்.

எனக்கு கிடைத்த அல்லது தரப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளாகவே அவை இருக்கும். மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் நபர்கள் தங்களை யாரும் எதிர்த்து எதுவும் சொல்ல முடியாது என எடுக்கிற முடிவிற்கு சாதகமாகவே  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் எதனையும் சொல்வதற்கு பயந்தவர்களாக இருந்துள்ளனர். அத்தகைய மனநிலையை நான்  பகுதியளவே மாற்றியிருக்கிறேன். அதிகாரிகள் எந்த வித பயமும் இல்லாமல் துணிச்சலாக கருத்து கூற வைப்பது என்பது சவாலாகவே இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்