முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனேஷ்குமார் உலகின் தலைச்சிறந்த பந்து வீச்சாளர் : சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர் புகழாரம்

திங்கட்கிழமை, 30 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு - இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் உலகின் தலைச்சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் கூறினார். தற்போது இந்தியாவில் 9வது ஐ.பி.எல். கிரிக்கெட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.  இதில்  கேப்டன் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து சாம்பியனானது.

இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் கூறியதாவது, ஐ.பி.எல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போட்டியில் பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்  மிக அற்புதமாக பந்து வீசினார் .அவர் உலகத்தர பந்து வீச்சாளர் ஆவார். சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் என்ற முறையில், நான் புவனேஷ் குமார் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தேன். அவர் விளையாட்டை மிகவும் நேசிப்பவராக உள்ளார்.

இறுதிப்போட்டியில் 38 பந்துகளில் 69ரன் எடுத்தேன். புவனேஷ் குமார், முஸ்தபிசுர் ரகுமான் மிக அற்புதமாக கடைசி நேரத்தில் பந்து வீசினார்கள். இதனால் 8ரன் வித்தியாசத்தில் நாங்கள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடிக்க முடிந்தது. முதன் முறையாக சன்ரைசர்ஸ் அணி ஐ.பி.எல் போட்டியில் சாம்பியனாகியுள்ளது. நாங்கள் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில்  7விக்கெட்டுக்கு 200ரன் என்ற நிலையில் கட்டுப்படுத்தினோம்.

இதனால் 8ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய வங்க தேச பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான் வளரும் நட்சத்திர பந்து வீச்சாளர். அவர் புவனேஷ் குமாருடன் அற்புதமாக இணைந்து பந்து வீசினார்.  இந்த போட்டியில் அணியின் கூட்டு முயற்சியிலேயே வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் குடும்பமாக ஆடி வெற்றியை எட்டியுள்ளோம்.இதனால் எங்களுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்