முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பினாமி மூலம் லண்டனில் சொத்து வாங்கி குவித்துள்ள சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதோரா மீது அமலாக்கத்துறை விசாரணை

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      இந்தியா
Image Unavailable

பெய்ஜிங்  -  பினாமி மூலம் லண்டனில் சொத்து வாங்கி குவித்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராமீது அமலாக்கத்துறை விசாரணைநடத்துகிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஏற்கனவே ஹரியானா நில முறைகேடு விவகாரத்தில் சிக்கினார். தற்போது அவர் பினாமி மூலம் லண்டனில் ரூ 19கோடிக்கு வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசு நிலங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கி நிலை மோசடி செய்த வழக்கில் ராபர்ட் வதேரா சிக்கினார் , அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆயுத  விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கும் ராபர்ட் வதேராவிற்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இடையே பல கோடி ரூபாய் பண பரிமாற்றமும் நடந்துள்ளது. சஞ்சய் பண்டாரி ஆப்செட் இந்தியா சொலுசன்ஸ் என்ற பெயரில் ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். சஞ்சய் பண்டாரி ஆயுத விற்பனையில், மோசடி செய்வது தெரிய வந்துள்ள நிலையில் அவரது நிறுவனத்தில் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் சஞ்சய் பண்டாரி  அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது நிறைய மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற ஆவணங்களை வருமான வரித்துறைஅதிகாரிகள் கண்டெடுத்தார்கள். அதில் ஆயுத தரகர் பண்டாரிக்கும் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கும் இடையே  தகவல் பரிமாறப்பட்டுள்ளது தெரிய வந்தது.  

அந்த மின்னஞ்சல் தகவலில், ராபர்ட்வதேரா லண்டனில் சஞ்சய் பண்டாரி மூலம் ரூ 19கோடி மதிப்பில் 2009ம் ஆண்டு ஒரு பங்களாவை வாங்கியிருப்பது தெரிய வந்தது. பிறகு ராபர்ட் வதேரா அதிக விலைக்கு அந்த பங்களாவை விற்றுள்ளார். ராபர்ட் வதேரா அடிக்கடி மோசடி வழக்குகளில் சிக்கும் விவகாரம் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிகள் குறித்து வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அமலாக்கத்துறை தனது விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார். லண்டனில் தான் எதுவும் சொத்து வாங்க வில்லை. எந்த ஆயுத டீலருடனும் எனக்கு தொடர்பு இல்லை என ராபர்ட் வதேரா விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்