முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 4 பேரும் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை,  தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக அ.தி.மு.க.,வை சேர்ந்த நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக 6 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கு11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வைத்தியலிங்கம், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரை வேட்பாளர்களாக அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். கடந்த 27-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ராஜ்ய சபா வேட்பாளர்களுக்கான மனு பரிசீலனையில் அ.தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்ட 7 பேரின் மனுக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று இறுதி நாளாகும். மேலும் நேற்று மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்கள் வாபஸ் பெற நேரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் வேட்பு மனுக்களை திரும்ப பெறாததையடுத்து அ.தி.மு.க.,வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதக்கிருஷ்ணன், விஜயகுமார், வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

தி.மு.க சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டதாக சட்டபேரவை செயலாளரும் ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நால்வரும் தாங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்