முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு - கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கை கல்வித்துறை அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு 1974-ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், பிடித்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

எனவே கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் இதுகுறித்து நேரில் வலியுறுத்தினார். இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கை பதில் தெரிவித்துள்ளது. இதுபற்றி இலங்கை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன ஒன்று கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது. இரு நாடுகளால் பேசி தீர்க்கப்பட்ட ஒன்றை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்