முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளே நியமனம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

 தர்மசாலா   - இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளராக சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ளே நேற்று நியமிக்கப்பட்டார். தர்மசாலாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்திற்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகுர் இதனை தெரிவித்தார்.  அனில் கும்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து அனுராக் தாகுர் நேற்று கூறியதாவது,

 இந்திய கிரிக்கெட்டின் தலைச்சிறந்த வீரர் என்ற நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் உருவெடுத்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அயல் நாட்டைச்சேர்ந்த வீரர்களும் போட்டியிட்டார்கள். இந்த நிலையில் அனில் கும்ளேவை தேர்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பயிற்சியாளர் இந்தியரா அல்லது அயல் நாட்டவரா என்பது விஷயம்  அல்ல .

இந்திய அணிக்கு தலைச்சிறந்த பயிற்சியாளர் தேவை . அந்த அடிப்படையில்தான் நாங்கள் கும்ளேவை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அனுராக் தாகுர் தெரிவித்தார். இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கும்ளே கூறுகையில், ,இந்திய கிரிக்கெட்அணியின் டிரெஸ்சிங் அறையில் வேறு பதவியுடன் நான் வர தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவம் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னதாகக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லட்சுமணன் ஆகியோரைக்கொண்ட 3உறுப்பினர் ஆலோசனைக்குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்து இருந்தது. இந்த குழு கொல்கத்தாவில் நேர் முகத்தேர்வினை நடத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கும்ளே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் அம்ரே, இந்திய அணியினன் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்