முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகல் தாக்கத்தை சமாளிக்க தயார் : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து விலகல் தாக்கத்தை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து  தொடர்வதா? வேண்டாமா? என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் , விலகவேண்டும் என்று பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர்.

இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து உள்ளது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியை கண்டது. இந்நிலையில் தங்கம் விலையும் உயர்ந்து உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:- ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து  விலக  மக்கள் வாக்களித்து உள்ளனர்.

அது  உலகப் பொருளாதாரத்தில் ஏற்கனவே நிலவும் கொந்தளிப்பையும், நிச்சயமற்ற தன்மையையும் மேலும் அதிகரிக்கும்.உலக நாடுகள் அனைத்துமே இந்த முடிவால் ஏற்படக்கூடிய கொந்தளிப்பை சமாளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதன் இடைக்கால தாக்கம் குறித்து கவனமாக இருக்கவேண்டும். இந்தியா தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறது. ஸ்திரத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் சரியாக இருக்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்