முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அரசியல்வாதிகளிடம் இருந்து ஹிலாரி கிளிண்டன் நிதி உதவி பெற்றார்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.  இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளிண்டன் பணம் பெற்றதாக டிரம்ப்  குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்க புக்லெட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது.

இந்தியா-அமெரிக்கா சிவில் அணு ஒப்பந்தத்துக்கு  ஆதரவாக ஹிலாரி வாக்களிப்பதற்காக, ஹிலாரி கிளிண்டனின் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இந்திய தொழில் அதிபர்கள் நன்கொடை வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், 2008 ஆம் ஆண்டில்  இந்திய அரசியல்வாதி அமர் சிங் பத்து லட்சம் டாலர்கள் முதல் 50 லட்சம் டாலர்கள் வரை கிளிண்டன் குடும்ப நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த வாரம் நியூயார்க்கில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்ததாக  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி அந்த புக்லெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்