முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பயிற்சியாளர் கும்ளேவால் இந்திய அணிக்கு புதுபலம் - கேப்டன் விராட் கோலி பெருமிதம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் அனில் கும்ளேவின் அணுகுமுறை வீரர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

வரவிருக்கும் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி  17 டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராகி வருகிறது. மேற்கு இந்திய தீவில் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது விராட் கோலி தலைமையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி மேற் கொண்டது.

மேற்கு இந்திய தீவிற்கு இந்திய அணி புறப்படவுள்ள நிலையில்,இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று கூறியதாவது, நாங்கள் சரியான டெஸ்ட் அணி என்பதை நிருபிப்பதற்கான சரியான சூழலாகவும், சந்தர்ப்பமாகவும் உள்ளது. நாங்கள் எங்களை மதிப்பீடு செய்து கொள்வதற்கும்  இதுதான் சரியான நேரம். வரவிருக்கும் மாதங்கள்  நாங்கள் எப்படி ஆடுகிறோம் என்பதை முடிவு செய்யும் நாட்களாக இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளே நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். அயல் நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் எப்படி வெல்வது என்பது குறித்து கும்ளேவிடம் கருத்துகளை தெரிவிக்க முடியும். அனில் கும்ளே வரவு எங்களுக்கு புதிய பலமாக உள்ளது. அவரது வருகையால், பந்து வீச்சாளர்கள் மிகுந்த ஆதரவு உள்ள மன நிலையை உணருவார்கள். இந்தியாவிற்காக அவர் பல போட்டிகளை வென்றுள்ளார். இந்தியா மற்றும் அயல் நாடுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது கும்ளேவிற்கு தெரியும்.

இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் தேசிய அணியில் பெரும் பிணைப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டில் முழு கவனம் செலுத்தும் நிலையில் இந்திய அணியினர் பாச பிணைப்புடன் இருப்பதற்கு பொழுது  போக்கு நிகழ்ச்சிளிலும் பங்கேற்க வேண்டும் என கும்ளே விருப்பம் தெரிவித்துள்ளார். அதைப்போன்று அவர் சில நிகழ்ச்சிகளிலும்  இந்திய வீரர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். இது எங்களுக்கு எதிர்பாராக மகிழ்ச்சியாக இருந்தது.

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் எங்களை டோனி சந்தித்து ஆலோசனை அளிக்கும் நிகழ்ச்சியையும் கும்ளே ஏற்பாடு செய்திருந்தார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்