முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரி மலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : கேரள கம்யூனிஸ்ட் அரசும் உறுதி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

 புதுடெல்லி  -  சபரி மலை ஐயப்பன்  கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது  என்று கேரள இடது சாரி கூட்டணி அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைபாட்டை தற்போதைய மாநில அரசும் கடைபிடிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசக பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. கேரளாவில், உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 5வயது முதல் 50வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

சமீப காலமாக எல்லா கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள சிங்கனாப்பூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க போராட்டங்கள் நடந்தன.. கடைசியில் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களும் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.இதன் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இடது சாரிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சி.பி.எம். தலைவர் பினராயி விஜயன் உள்ளார். தற்போதைய இடது சாரிகள் அரசும் சபரி மலை கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் பாரம்பரியத்தை திடீரென மாற்ற முடியாது. எனவே பெண்களை சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது. இதனை கேரள அரசின் மூத்த வழக்கறிஞர் வி.கிரி கோர்ட்டில் தெரிவித்தார்.

இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  கோவில் என்பது அனைவருக்கும் பொதுவான புனித தலமாகும். அங்கு பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது பெண்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக தெரிகிறது.எனவே இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சு விசாரிக்கலாம் என கருதுகிறோம் என குறிப்பிட்டார்கள். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்